அடுக்கு மாடிக்கட்டிடங்கள் நிறைந்த சென்னை மாநகரத்தில் அடிப்படை வசதிகள் அற்ற ஒர் இடமாக பம்ஸ்ரிங் ஸ்ரேசன் அமைந்திருந்தது. அந்த இடத்தில் நுழைவாயிலே அம் மக்களின் வாழ்க்கை நிலையினை பிரதிபலித்திருந்தது. ஒடுக்கமான வீதியின் இரு பக்கமும் வீடுகள் அமைந்திருந்தன. வீடுகளின் வாசல்களில் கழிவுப்பொருட்களும் வாய்க்கால்களுமே இருந்தன .பெருமளவு சுகாதார சீர்கேடுகளை அம் மக்கள் தினமும் எதிர் கொள்கின்றனர் என்பதை உணர்த்தியது. ஆம் மக்களுடன் சில நிமிடங்களே உரையாடினோம். 30 வருடங்களாக அங்கேயே வசிப்பதாக அறிந்தோம். சில குடும்பங்களில் நாளாந்த வருமானம் 30 ரூபா முதல் 70 ரூபா வரை உள்ளதாக கூறினார். ஓவ்வொரு வீடுகளிலும் ஆண்கள் மட்டுமே வேலைகளுக்கு செல்கின்றனர் பெண்கள் வேலைக்கு செல்வதை விரும்புவதில்லை பெருமளவில் படித்திருக்கவிலலை. ஆண்கள் தமது பிள்ளைகள் படிக்கவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். B.s.c .B.comபடித்த பத்துப்பேர் அங்கே இருக்கின்றனர். 350 வீடுகள் அங்கே இருப்பதாகவும் 600 குடும்பங்களை சேர்ந்த 3500 மக்கள் அங்கே வசிப்பதாகவும் கூறினர்.
இப் பகுதியில் வசிக்கின்ற சிறுவர்கள் பாடசாலைக்கு நெடு தூரம் சென்று வருகின்றனர் இப் பகுதியில் வசிக்கின்ற மாணவர்கள் ஆங்கில மொழியின் மூலமே தமது கல்வியை தொடர்கின்றனர். சில மாணவர்கள் வீட்டு கஸ்ரத்தின் காரணமாக பாடசாலை செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
சமையல் அறை குளியல் அறை அனைத்துமே ஓரே இடமாக இருந்தது. சிறிய அந்த இடத்திற்கு மக்கள் செல்ல 3000 வரை செலவளித்து பணம் கொடுத்து வாங்கியதாகவும் கூறினார்.
அங்கு வாழும் ஒரு சில மக்கள் அந்த வீட்டை தாமே கட்டியதாகவும் ஒரு சிலர் அரசாங்கம் கட்டிக்கொடுத்ததாகவும் கூறினார். அரசாங்கத்தினால் பால்மா சத்துணவு அரிசி வழங்கப்பட்டதாக கூறினார். ஒரு சிலர் பால் மாவினை 18 மூபா கொடுத்து பணத்திற்கு வாழ்வதாகவும் கூறினார். குடும்ப தலைவர்கள் ஆட்டோ ஓட்டுதல் கூலி வேலை போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அதிகம் பேர் பத்தாவது வரையே கூடியளவு படித்திருந்தனர். வீடுகள் அனைத்தும் நெருக்கமாகவே கட்டப்பட்டிருந்தத. குப்பைகள் அகற்றாததன் காரணத்தை கேட்டபோது காப்பரேசன் காரர் வரவில்லை என கூறினர் நீங்களே அதை செய்திருக்களாமே என கேட்டபோத இது வரை தமக்கு யாருமே அப்படி சொல்லவில்லை இனிமேல் முயற்சிக்கின்றோம் என கூறினர். திருமணமான 24 வயதுடைய பெண்ணுடன் பேசினோம் அவர் பொலிஸாக விரும்பியதாகவும் ஆனால் தகப்பனின் வற்புறுத்தலால் திருமணமானதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.ஏழ்மையின் நிலையில் அவர்கள் வாழ்கின்ற போதும் அம் மக்களிடையே ஒர ஒற்றுமை நிலவியது. ஆட்சிமாற்றம் தொடர்பாக கேட்ட போது அதனை தாம் வரவேற்பதாக கூறினார் இப்போதுள்ள அரசாங்கத்தில் முழு நம்பிக்கை கொண்டிருந்தனர்.இப்ப இருக்கிற ஆட்சி அம்மாவோட ஆட்சி நம்ம ஆட்சி என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
அந்த இடத்தில் ஒரு சில மணிநேரமே எம்மால் தரித்து நிற்க முடியவில்லை ஆனால் பல வருடங்களாக நம்பிக்கையுடன் அந்த மக்கள் வாழ்வது எமக்க வியப்பை ஊட்டுவதாக அமைந்தது. மக்களின் அண்றாட தேவைகளைநிறைவு செய்வதே பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆனாலும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே கழிகின்றது. என்பதும் மகிழ்ச்சியானதே………

0 comments:
Post a Comment