Tuesday, January 3, 2012

புணரமைப்பும் பழமையழிப்பும்




வடக்கின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அண்மைக்காலமாக யாழ்நகர் உள்ளிட்ட இலங்கையின் வடபகுதி முழுவதுமே அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.2008ல் ஏற்படுத்தப்பட்ட வடக்கின் அபிவிருத்தி பணிகள் மகிந்த சிந்தனை செயற்திட்டத்தின்  இவ்அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அபிவிருத்திப்பணியின் முதற்கட்டமாக யாழ்நகரின் வீதிகள் பெருந்தெருக்கள் வீதி அகலிப்பு அபிவிருத்தி திட்டத்தின் மூலம் அகலமாக்கப்பட்டு புணரமைப்பு செய்யப்படுகின்றன. இதற்காக வீதியின் இருபக்கங்களிலும் குடியிருப்புக்கட்டடங்கள் கடைத்iதொகுதிகள் பலவும் உடைத்தகற்றப்பட்டுள்ளன. மக்களும் அபிவிருத்தியைப்பெற்றுக்கொள்ளும் நோக்கோடு செயற்றிட்டத்திற்கு உதவியிருந்தனர்.வீதிக்கரைகளில் இருந்த பெருமளவிலான பழமை பேசும் நமது சொத்துக்கள் அழிக்கப்பட்டு புதுமைகள் பலவும் வந்து சேர்ந்தன.

இதனடிப்படையிலேயே யாழ்ப்பணத்தின் தொன்மையினையும் வரலாற்றினையும் எடுத்துக்கூறும் யாழ்ப்பாணத்தின் கோட்டையும் புணரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. இக்கோட்டை ஒல்லாந்தர் காலத்துடன் தொடர்புடைய பழமையானது.  ஆதனை தெடர்ந்து தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலப்பதிவுகள் பலவும் இக்கோட்டையின் வரலாற்றுடனேயே தொடர்புடையனவாக உள்ளன. கோட்டை ஒரு ராயதானியாகவே இருந்துள்ளது. கோட்டையின் அமைப்பு முறை பண்டைய தொழில் நுட்ப சிறப்பினை பறைசாற்றி நிற்கின்றது. இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பு வாய்ந்தன. இதன் அமைவிடமும் சரித்திரப்பிரசித்தி வாய்ந்தது. யாழ்நகரின் முக்கிய இடங்களான யாழ் நூல் நிலையம்இ மத்திய பேரூந்து நிலையம்இ பண்டைய pன்ஆலயமான முனியப்பர் கோயில் போண்றவற்றை அண்மித்ததாக யாழ் பண்னைப்பகுதியில் கடற்கரையை நோக்கியதாக அமைக்கப்பட்டள்ளது.
           புணரமைக்கப்படும் கோட்டையயை பல சுற்றுலாபயணிகளும் வந்துபார்வையிட்டுச் செல்வது மனதிற்கு மகிழ்ச்சியைக்கொடுத்திருந்தாலும் நமது வருங்கால சந்ததியினரால் அதன் வரலாற்றை அறிந்து கொள்ள முடியாமற் போய் விடுமே என்பதும் மனதிற்கு வருத்தத்தைக் கொடுப்பதாகவே உள்ளது. கோட்டையின் புணரமைப்புப் பணிகள் ஆரம்பமாகி இரு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் கோட்டையின் சிதைந்த பக்கங்கள் பலவும் அழிக்கப்பட்டும் விட்டன.
          கோட்டையை யாழ்நகரின் பிரதான சுற்றுலா மையங்களில் ஒண்றாக மாற்றவே இவ்முயற்ச்சி எடுக்கப்பட்டாலும் நம் வரலாறுகளில் ஒரு பகுதிப்பதிவு மறையப்போகின்றதே என்ற ஏக்கமும் இருக்கத்தான் செய்கின்றது. உண்மையில் கோட்டை புணரமைக்கப்படுகின்றதா? அல்லது அதோடு நம் வரலாறு அழிக்கப்படுகின்றதா?
கோட்டைமட்டுமல்லாது இன்று நம் வரலாற்றைக் கூறும் எத்தனையோ மரபுச்சொத்துக்கள் காலமாற்றத்தால் அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மக்களும் அதனை ஏற்றக்கொள்ளத் தயாராகவே இருக்கின்றனர். ஏனெனில் புதுமையை ஏற்றுக் கொள்ளும் பண்பு அதிகரித்துள்ள நிலையில் பழமையை பேணும் பண்பு நம்மிடையே இல்லாமற் போய்விட்டது.

0 comments:

Post a Comment