மறக்க முடியாத பல அனுபவங்களைக் ;கொடுத்த இந்தியப்பயணம்…………………..
இந்தியப்பயனத்தில் மறக்கமுடியாத அனுபவங்கள் பலவற்றை சந்தித்தேன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவம் கிடைத்தன. வுpமானத்தில் பயனித்தது புதிய ஒரு அனுபவத்தை கொடுத்தது. முதல் முதல் பயனித்திருந்தாலும் பயமில்லாமல் நண்பர்களுடன் பயனித்தது மகிழ்சியான அனுபவத்தை கொடுத்தது. சென்னை விமான நிலையத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் வரவேற்பு எமது ஆசிரியர் மீது அவர்கள் கொண்ட மரியாதையை வெளிப்படுத்தியது. ஆவரிகளின் வரவேற்பு உபசரிப்பு ஈழமாணவர்கள் என்று அறிமுகப்படுத்திய தமிழ் உணர்வு எம்மை பிரமிக்க வைத்தது.
இலங்கை மாணவர்களை வழிநடத்திய விதம் தொடர்பியல் துறை தலைவரின் உரைகள் போன்றன இந்தியத்தமிழர்கள் இலங்கை தமிழர் மீது கொண்டுள்ள நிலையை காட்டியது.
சென்னை பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைத்து முதல் தடவை சென்ற சேரிப்புறம் சென்னை மக்களின் வாழ்ககை நிலையின் இன்னொரு பக்கத்தை காட்டியது. ஏத்தனையோ மாடிக்கட்டிடம் நிறைந்த சென்னை மாநகரத்துக்குள் இப்படியொரு இருப்பிடமா மத்திய அரசு இவர்களின் மீது எவ்வாறான பார்வையை கொண்டுள்ளது? என்று எண்ணத்தோண்றியது. நான்கு சுவர்களுக்குள் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தின் வாழ்க்கை நகர்கின்றது. வீட்டு வாசலிலேயெ வரவேற்கும் அம்சமாக கழிவுத்தொட்டிகள் வீதிகள் முழுவதும் குப்பைகூழங்கள் கைகள் தாமாகவே மூக்கை பொத்திக்கொள்ளும் இடத்தில் மூன்று நிமிடங்கள் நிற்க முடியாத இடத்தில் முப்பது வருடமாக மக்களின் வாழ்க்கை பயனிக்கின்றது. எந்தவித அடிப்படை வசதி;களையும் கொண்டிராத ஒரு பிரதேசம் நகரத்தின நடுவில் உள்ள நரகம் இது தான் . ஒவ்வொரு இடத்தின் அமைவுகளும் ஒவ்வொரு நிலையை கூறின. நரகத்துக்குள் வாழ்ந்தாலும் எம்மைக்கண்டவுடன் ஏதொ ஒரு எதிர்பார்ப்பு, உபசரிப்பு, இலங்கை மக்கள் மீது கொண்டுள்ள மதிப்பு. சகோதரத்துவம் வித்தியாசமான அனுபவத்தினை பெற்றுக்கொடுத்தது. மெரினா கடற்கரையிலும் சென்னை வீதிகளிலும் இரவு வேளைகளை கழிக்கும் அதிகளவான மக்களை கண்டேன். இந்திய சனத்nதொகையில் 50 வீதமான மக்கள் இவ்வாறுதான் வாழ்கின்றார்களா? என்ற ஏக்கம் மனதுக்குள். அலங்கார வாசலின் அலங்கோலப்பக்கம் இது தான் என தெரிந்தது. சென்னை வீதியில் நடந்தது கூட ஒரு புதிய அனுபவம் தான் இந்திய வீதியில் வீதி நடைமுறையை பின்பற்றும் நடைமுறை இல்லாததை கண்டேன் எவ்வளவு பெரிய விசாலமான வீதியில் இவ்வாறான நிலையா என்பதும் மனதுக்கு வேதனையை கொடுத்தது. சென்னை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தொடர்சியான கருத்தரங்குகள் இலங்கை பிரச்சினைகள்மீது இந்திய ஊடகங்களின் பார்வையை கண்டு கொண்டேன் இந்திய ஊடகங்கள் இலங்கை செயய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எந்த வகையில் இருக்கின்றது
பெண்கள் ஊடகங்களில் எந்த வகையில் செயற்படுகின்றனர் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் எவ்வாறு உள்ளது ஆவனப்படம் தயாரிப்பு போண்ற தகவல்களை தொடர்சியான கருத்தரங்குகள் மனதிற்கு ஆரம்பத்தில் சலிப்பை கொடுத்திருந்தாலும் விறு விறுப்பான கருத்துக்களால் சுவாரஸ்யமாக தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.
பெங்களுர் நோக்கிய எமது பயனம் புது வகையான பல அனுபவங்களை பெற்றுக்கொடுத்தது. நீண்ட தூரப்பிரயாணம் சேலம் பெரியார் பல்கலைக்கழக கருத்தரங்குகள் முற்றம் நாடக குழுவினரின் நடன நிகழ்வுகள் பயனத்தில் குதுகாலமாக மாற்;றியது. இடையில் நாம் சென்ற பல்லவர் சோழர் கால கோவில்கள், சிற்பங்களின் அமைப்பு முறைகள், பிரம்;மாண்டமான கோபுரங்கள், அமைதியான சூழல,; கதைசொல்லும் ஓவியங்கள,; போண்றவற்றை பார்வையிட்டமை கூட புதிதாக இருந்தது. பயணத்தின் போது எமது ஆசிரியரின் நன்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தோம் பொருளாதார ரீதியில் வறுமை நிலையில் அவர் இருந்தாலும் அவர் கொண்ட நட்பின் வெளிப்பாட்டினால் எம் அனைவரையும் அவரது வீட்டிற்கு வரவேற்று தேனீர் கொடுத்து உபசரித்தார். அந்த பண்பு நன்பன் மீது அவர் கொண்ட மதி;ப்பு மரியாதை என்னை மிகவும் பாதித்திருந்தது. அமைதியான அந்த கிராம சூழலும் என்னை மிகவும் கவர்ந்திருந்தது.
ஊட்டி நோக்கிய எமது பயனம் மிகவும் பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருந்தது. வளைந்து நெளியும் மலைப்பாதைகள்pல் எமது பயனம் ஆரம்பித்தது. வீதியில் இரு பக்கமும் ஓங்கி உயர்ந்த மரங்கள் மனதை பிரமிக்க வைத்தன ஊட்டியின் மலைகள.; மலை உச்சியின் மீது அமைந்துள்ள வீடுகள.; ஊட்டியில் நாம் சந்தித்த பழங்குடி இன மக்கள் கூட மனதை தொட்டிருந்தனர் ;வித்தியாசமான அவர்களின் பேச்சு முறைகள் வாழ்க்கை முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடிந்தது. அவர்களுடன் உரையாடியது கூட வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. இந்தியாவில் நாம் கண்ட காட்சிகளின் என்னை மிகவும் வருடியது பிருந்தாவனம், மைசூர் பலஸ் . பிருந்தாபனத்தில் நான் பார்த்த தன்னீர் நடனம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது மைசூர் பலஸ் பிரமாண்டமான அமைப்பாக என் பார்வைக்கு தோன்றியது. எவ்வளவு பெரிய நிலப்பரப்பில் விசாலமான கட்டிடங்கள்.; அமைந்திருந்தன மைசூர் ராஜாவின் கலையார்வத்தினை புலப்படுத்துவதாக அவை அமைந்திருந்தன. ஒவ்வொரு சிற்பங்களும் ஒவ்வொரு கதையை பேசின, பண்டைய சிற்பிகளின் கலை நுட்பத்தினை பேசின, இவ்வாறாக இந்தியாவில் நான் பார்த்த கேட்ட ஒவ்வொரு அம்சங்களும் ஒவ்வொரு புதிய அனுபவத்தினை எனக்கு கொடுத்தன தொடர் பயனங்கள் தொடர் பயி;ற்சிகள் சுவாரஸ்யமானனவையாக அமைய முற்றம் நாடகக் குழுவினரும் உதவியிருந்தனர். பறை இசையையும் நடனத்தினையும் இந்தியாவிலேயே முதன் முதலில் பார்வையிட்டேன் முதலில் மனத்திற்கு ஓர் அமைதியை கொடுத்தது . சென்னையில் கண்ட ஒவ்வொரு காட்சிகளுமே புதியதாக தோன்றியது. இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள வெண்டும் என்ற எண்ணம் தோன்றியது .முடிந்தவரை பல்வேறு தகவல்களை பெற்றுக்கொண்டேன் சுவாரஸ்யமான அனுபவங்களையும் இந்தியப்பயனம் கொடுத்திருந்தது.

0 comments:
Post a Comment