Tuesday, January 3, 2012

மறக்க முடியாத பல அனுபவங்களைக் கொடுத்த இந்தியப்பயணம்………………….



மறக்க முடியாத பல அனுபவங்களைக் ;கொடுத்த இந்தியப்பயணம்…………………..
இந்தியப்பயனத்தில் மறக்கமுடியாத அனுபவங்கள் பலவற்றை சந்தித்தேன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அனுபவம் கிடைத்தன. வுpமானத்தில் பயனித்தது புதிய ஒரு அனுபவத்தை கொடுத்தது. முதல் முதல் பயனித்திருந்தாலும் பயமில்லாமல் நண்பர்களுடன் பயனித்தது மகிழ்சியான அனுபவத்தை கொடுத்தது. சென்னை விமான நிலையத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் வரவேற்பு எமது ஆசிரியர் மீது அவர்கள் கொண்ட மரியாதையை வெளிப்படுத்தியது. ஆவரிகளின் வரவேற்பு உபசரிப்பு ஈழமாணவர்கள் என்று அறிமுகப்படுத்திய தமிழ் உணர்வு எம்மை பிரமிக்க வைத்தது.

தொடர்பாடலில் ஆங்கிலமொழியின் அவசியம்





ஆங்கிலம் என்பது இன்று உலகில் பொது மொழியாக அறியப்பட்டுள்ளது. ஆங்கிலம் அந்நியரினால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் அதன் தேவை இன்று உலகம் முழுவதம் அறியப்பட்டுள்ளது. தொடர்பாடலுக்கு மொழி ஒரு தடையாக உள்ள இடங்களில் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகின்றது.
ஆங்கிலேயர் தமது மொழி ஆற்றலினாலும் விடாமுயற்சியினாலும் வளற்ச்சி அடையாத அங்கிலத்தை உலகம் முழுவதம் பரப்பினர். ஆங்கிலம் இன்று தொடர்பாடலில் அதிகமாகப்பயன்படத்தப்படுவதற்குக் காரணம் அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழியாகக் காணப்படுவதாலாகும். ஆயினும் இன்று எத்தனை பேர் அதனை அறிந்து வைத்துள்ளனர்? எனக்கேட்டால் மிகக்குறைந்த அளவினரே இருப்பர். கிராம மட்டங்களில்  ஆங்கிலமே தெரியாத எத்தனையோ பேர் இருப்பார்கள். இன்றும் பல கிராமமட்ட பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படாத நிலையும் காணப்படுகின்றது. ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. ஆனால் நகரங்களில் ஆஙகில மொழி மூலப்;பாடசாலைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. நகர்ப்புறப் பெற்றோரும் ஆங்கில மொழி மூலக்கற்கைகளையே தமது பிள்ளைகள் பயில வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.

சிங்காரச் சென்னையில் நான் பார்த்த சிதறிய கோலங்கள்




அடுக்கு மாடிக்கட்டிடங்கள் நிறைந்த சென்னை மாநகரத்தில் அடிப்படை வசதிகள் அற்ற ஒர் இடமாக பம்ஸ்ரிங் ஸ்ரேசன் அமைந்திருந்தது. அந்த இடத்தில் நுழைவாயிலே அம் மக்களின் வாழ்க்கை  நிலையினை பிரதிபலித்திருந்தது. ஒடுக்கமான வீதியின் இரு பக்கமும் வீடுகள் அமைந்திருந்தன. வீடுகளின் வாசல்களில் கழிவுப்பொருட்களும் வாய்க்கால்களுமே இருந்தன .பெருமளவு சுகாதார சீர்கேடுகளை அம் மக்கள் தினமும் எதிர் கொள்கின்றனர் என்பதை உணர்த்தியது. ஆம் மக்களுடன் சில நிமிடங்களே உரையாடினோம்.  30 வருடங்களாக அங்கேயே வசிப்பதாக அறிந்தோம். சில குடும்பங்களில் நாளாந்த வருமானம் 30 ரூபா முதல் 70 ரூபா வரை உள்ளதாக கூறினார். ஓவ்வொரு வீடுகளிலும் ஆண்கள் மட்டுமே வேலைகளுக்கு செல்கின்றனர் பெண்கள் வேலைக்கு செல்வதை விரும்புவதில்லை பெருமளவில் படித்திருக்கவிலலை. ஆண்கள் தமது பிள்ளைகள் படிக்கவேண்டும்  என்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். B.s.c .B.comபடித்த பத்துப்பேர் அங்கே இருக்கின்றனர். 350 வீடுகள் அங்கே இருப்பதாகவும் 600 குடும்பங்களை சேர்ந்த 3500 மக்கள் அங்கே வசிப்பதாகவும் கூறினர்.

இயல்பு நிலைக்கு திரும்புமா வசந்தபுரம் மக்களின் வாழ்வு நிலை??




அரியாலையில் வசந்தபுரம் கிராமமக்களுக்கான மீள்குடியேற்றம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
  சொந்த இடங்களில் மீள் குடியேறிய மகிழ்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொன்டு தமது இருப்பிடங்களுக்கு விட்ட மகிழ்ச்சியில் குடியேறிய அரியாலை வசந்தபுரம் மக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.
1990களில் உள்நாட்டு யுத்தம் காரணமாக தமது இருப்பிடங்களைவிட்டு புலம் பெயர்ந்து; சென்ற மக்கள் இந்தியாவிலும் இலங்கையின் பல் வேறு பகுதிகளிலும் குடியேறினர் தமது சொத்துக்களில் பெரும் பகுதியையே இழந்த மக்கள் 20 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் குடியேறியுள்ளனர்.

புணரமைப்பும் பழமையழிப்பும்




வடக்கின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அண்மைக்காலமாக யாழ்நகர் உள்ளிட்ட இலங்கையின் வடபகுதி முழுவதுமே அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.2008ல் ஏற்படுத்தப்பட்ட வடக்கின் அபிவிருத்தி பணிகள் மகிந்த சிந்தனை செயற்திட்டத்தின்  இவ்அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அபிவிருத்திப்பணியின் முதற்கட்டமாக யாழ்நகரின் வீதிகள் பெருந்தெருக்கள் வீதி அகலிப்பு அபிவிருத்தி திட்டத்தின் மூலம் அகலமாக்கப்பட்டு புணரமைப்பு செய்யப்படுகின்றன. இதற்காக வீதியின் இருபக்கங்களிலும் குடியிருப்புக்கட்டடங்கள் கடைத்iதொகுதிகள் பலவும் உடைத்தகற்றப்பட்டுள்ளன. மக்களும் அபிவிருத்தியைப்பெற்றுக்கொள்ளும் நோக்கோடு செயற்றிட்டத்திற்கு உதவியிருந்தனர்.வீதிக்கரைகளில் இருந்த பெருமளவிலான பழமை பேசும் நமது சொத்துக்கள் அழிக்கப்பட்டு புதுமைகள் பலவும் வந்து சேர்ந்தன.

எங்களுக்கு நடந்தது தெரியும் ஆனால் சொல்ல மாட்டோம்!




 யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக யாழ்மக்களிடம் கேட்டபோது எல்லா மக்களிடமும் இருந்து வந்த பதில் “எங்களுக்கு நடந்தது, நடக்கிறது தெரியும் ஆனால் எம்மால் எதுவுமே  சொல்லமுடியாது. ஏங்களை எதுவுமே கேட்க வேண்டாம். நீங்கள் கேட்டிட்டு போய் கண்டபடி எழுதுவீர்கள் பிரச்சனை எங்களுக்குதான்.அது உங்களுக்கு தெரியாது”  இதே பதில்தான் யாழ்நகரின் பல பகுதிகளிலும் எங்களுக்குத் தெரியும் ஆனால் சொல்லமாட்டோம் என்ற பதில்தான் எங்களுக்கு கிடைத்தது. யாழ் நகரின் பல பகுதிகளிலும் எங்களுக்கு கிடைத்தது.
 யாழ் நகரில் அண்மைக்காலத்தில் பெரும்பீதியை ஏற்படுத்திய கிறீஸ் மனிதன் பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ் நாவந்துறை பகுதியில் மக்கள் மத்தியில் இருக்கும் பயம் ஓயவில்லை.

ஊடகங்களிடையே மொழிக்கலப்பு


பல சிறப்புக்களை கென்ட தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் ஊடகங்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
தமிழ் மொழியோடு பிற மெழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதனையும் தமது நோக்கங்களிலே ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும். இன்று பல ஊடகங்களும் ஊடகவியலாளரும் தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஆர்வம் காட்டிவரும் நேரம் சில ஊடகங்களிலே தமிழ் பயன்பாட்டைப் பார்க்கின்றபோது எல்லோருமே கவலைப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.