Thursday, March 1, 2012

அமெரிக்க தேவாலயத்தில் மகாத்மா காந்திக்கு ஞானஸ்தானம்



தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களுக்கு அமெரிக்காவில் சால்ட் லேக் நகரில் உள்ள மர்மோன் தேவாலயத்தில் ஞானஸ்நானம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து கடந்த 1996-ம் ஆண்டு இதை செய்துள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவில் உள்ள ரட்கி என்பவருக்கு மர்மோன் தேவாலயம் தற்போது தெரிவித்துள்ளது. இதை இந்து மத ஆர்வலர் ராஜன் செத் என்பவருக்கு ரட்கி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.மேலும் காந்திக்கு ஞானஸ்நானம் செய்வித்தது தொடர்பான ஆவணங்களை மர்மோன் தேவாலயத்தில் கடந்த 16-ந் திகதி, தான் பார்த்ததாகவும் அதன்பிறகு அந்த ஆவணங்கள் காணாமல் போய் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மறைந்த இந்திய தலைவர் ஒருவர், பதிலி முறையில் ஞானஸ்நானம் செய்யப்பட்ட சம்பவம், உலகம் முழுவதும் இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தியும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment