விளையாட்டு துறை பத்திரிகையாளரான இம்ரான் மிர்சாவிற்கும் தாயாகிய நசிமாவிற்கும் மும்பையில் சானியா மிர்சா பிறந்தார். அவர் ஹைதராபாதில் ஒரு ஷியா முஸ்லிம் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்.மிர்சா தனது ஆறாம் வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கி 2003ம் ஆண்டு டென்னிஸ் விளையாட்டை தொழிலாக்கிக் கொண்டார்.
அவர் தனது தந்தையாலும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் டென்னிஸ் விளையாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டார். அவர் முதலில் ஹைதராபாதில் உள்ள நாசிர் பள்ளியில் படித்து பின்னர் செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார்.2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிர்சா இந்திய பிடேறேஷன் கோப்பை குழுவில் சேர்ந்து அனைத்து மூன்று ஒற்றையர்கள் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். 2003ம் ஆண்டில் நடந்த விம்பிள்டன் மகளிர் இரட்டையர் விளையாட்டில் ரஷ்யாவை சேர்ந்த அலிசா க்லேய்போனவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி பட்டம் பெற்றார்.
மகளிர் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனைகளில் மிர்சா இந்தியாவிலிருந்து ஒற்றையர் விளையாட்டில் 27ம் தர வரிசையிலும் இரட்டையர் விளையாட்டில் 18வது தர வரிசையிலும் அடைந்து,மிக அதிகப் படியான தர வரிசையில் இடம் பெற்றவராவார். அவர் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் விளையாட்டுப் போட்டித் தொடரில் இந்தியாவில் முதல் பெண்மணியாக வித்திட்ட நற்பெயரை கொண்டுள்ளார்.