சுவிட்சர்லாந்த்தில் வேலைக்கு செல்லும் ஏய்ட்ஸ் நோயாளிகளில் 70% பேர் பணியிடங்களில் மிகவும் பாரபட்சமாக நடத்தப்படுவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
1996ஆம் ஆண்டில் ஏய்ட்ஸ் நோயாளி என கண்டறியப்பட்ட மைக்கேல் பௌடோயிஸ் என்பவர், சுவிஸ் ஏய்ட்ஸ் ஃபெடரேஷன்(Swiss Aids Federation) என்ற கூட்ட அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வினை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக ஏய்ட்ஸ் நோயாளிகள் இந்த கூட்டமைப்பை அணுகி ஆலோசனை கேட்டுவருகின்றனர். இந்தக் கூட்டமைப்பின் தலைவரான பெட்டினா மேஸ்கிலி தெரிவிக்கையில் சக பணியாளரும், மேற்பார்வையாளரும் HIV தொற்றுக்குள்ளானவர்களை கேலி செய்கின்றனர்.
அவர்களின் நோய் குறித்து விமர்சிக்கின்றனர், பணியிடத்தில் நோய்த்தொற்றைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டி பணி நீக்கம் செய்யப்படுவதாக இவர் தெரிவித்துள்ளார்.
பௌடோயிஸ் என்பர் HIV இருப்பதாக அறிந்ததும் தான் சில மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்கப்போவதாகக் கருதினார். ஆனால் நவீன மருந்துகளின் உதவியால் அன்றாட வாழ்க்கையை நல்ல முறையில் நடத்திக்கொண்டு வேலைக்கும் சென்று கொண்டு இருக்கிறார்.
அதேப்போன்று ஜுரிச் நகரத்தில் உள்ள ஒரு பெரிய காப்பீட்டு நிறுவனத்தின் HIV தொற்று நோயால் தாக்கப்பட்ட கணக்கு மேலாளர் ஒருவர் பணியின் போது மற்றவரிடம் பழகுவதால் அங்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட வில்லை, இது போன்ற சில உதாரணங்களை ஏய்ட்ஸ் ஃபெடரேஷன் என்ற கூட்டமைப்பு முன் வைத்துள்ளது.