Sunday, December 18, 2011

புவேந்தன் கலை விழா மழலைகளின் நிகழ்வுகள்

 சாவகச்சேரி  புவேந்தன் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்வுகள்
இன்று காலை தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.முதன்மை விருந்தினராக மாவட்ட நீதிபதி சாவகச்சேரி திரு.மா.. கணேசராஜா  கலந்து கொண்டார் . இந்நிகழ்வில் சாவகச்சேரி உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ரகுநாதன் அவர்கள் முன்பள்ளி ஆசிரியர் களின் சம்பள உயர்வு தொடர்பாக கருத்துக்களை வழங்கினார் .

Thursday, December 15, 2011

ஒளியை விஞ்சிய வேகம்: புதிய ஆராய்ச்சிகள்

அணுவிலும் சிறிய துகள்கள் சில ஒளியை விட அதிகமான வேகத்தில் பயணிக்கின்றன என்று அண்மையில் காட்டிய பரிசோதனையை வேறு ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் செய்து பார்த்தபோது ஆம் துகள்கள் ஒளியை விட வேகமாகப் பயணிக்கின்றன என்ற முடிவேதான் இம்முறையும் வந்துள்ளன.
ஒளியின் வேகம்தான் இந்தப் பிரபஞ்சத்தின் அதிகபட்ச வேகம் அதைவிட வேகமாக எதுவாலும் பயணிக்க முடியாது என்பது பல காலமாக அறிவியல் சமூகம் நம்பிவரும் விடயம்.
அப்படியிருக்க கடந்த செப்டம்பரில் முதல் தடவையாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியானபோது அதனைப் பலரும் சந்தேகித்தனர்.
அணுவாராய்ச்சிக்கான ஐரோப்பிய மையத்தின் நிபுணர்கள் மாற்றியமைக்கப்பட்ட வகையில் இந்த பரிசோதனையை செய்து பார்த்தனர்.
நியூட்ரினோஸ் என்று சொல்லப்படுகிற அணுவிலும் சிறிய துகள்கள் ஒளியை விட சற்று அதிமான வேகத்தில் செல்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு பரிசோதனைகள் தொடரவுள்ளன

Tuesday, December 6, 2011

பூமியைப்போல இன்னொரு கோள் கண்டு பிடிப்பு

பூமியின் பண்புகளை மிக நெருக்கமாக கொண்டுள்ள முதன்மையான வேற்று கிரகம் ஒன்றை
விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதுடன், இதனனை உறுதி செய்து உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

சாய்பாபா வாழ்க்கை



உலகமெங்கிலும் 178 நாடுகளில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் ஆன்மிக தலைவராக விளங்கி அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெற்று திகழ்ந்தவர் ஸ்ரீசத்யசாய்பாபா. ஆன்மிகம், கல்வி, சமூகசேவைகள், உள்ளிட்ட பல்வேறு அறப்பணிகளை செய்து அதன் மூலம் ஆன்மிகத்தை மக்களிடையே பரப்பியவர் ஸ்ரீசத்யசாய்பாபா.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி என்ற கிராமத்தில் பெத்த வெங்கம்ம ராஜூ-ஈசுவரம்மா தம்பதியினருக்கு 4-வது குழந்தையாக 1926&ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி சாய்பாபா பிறந்தார். இவருக்கு சத்யநாராயணன் ராஜூ என பெற்றோர்கள் பெயர் சூட்டினர்.
9-ம் வகுப்பு வரையே படித்த சத்திய நாராயணன் தனது இளம் வயதில் தன்னுடைய சகோதரர் சேஷ்மா ராஜுவின் உரவகொண்டா கிராமத்தில் வசித்து வந்தார். 1940 மார்ச் 8-ந்தேதி அவரை ஒரு தேள் கொட்டிவிட்டது. இதனால் மயக்கம் அடைந்த சத்தியா சில நாட்களில் குணம் அடைந்தார். ஆனால் அவரது நடவடிக்கைகளில் மாறுதல் காணப்பட்டது.
திடீர் என்று சமஸ்கிருத ஸ்லோகங்களை பாடினார். ஆனால் அதற்கு முன் அவர் சம்ஸ்கிருதம் படித்ததே இல்லை. இதனால் என்னவோ ஏதோ என்று பயந்துபோன் அவரது பெற்றோர் அவரை டாக்டர்களிடமும் மந்திரவாதிகளிடமும் காண்பித்தனர்.

வானத்தில் பூமியை போன்று மற்றொரு கிரகம்: நிபுணர்கள் உறுதி


வானவியல் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையம் சக்தி வாய்ந்த அதிநவீன கெப்லர் டெலஸ்கோப்பை பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் சமீபத்தில் பூமி போன்று மற்றொரு கிரகம் வானத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
 
அதற்கு “கெப்லர் 22-பி” என பெயரிட்டனர். அந்த கிரகம் பூமியில் இருந்து 600 வெளிச்ச ஆண்டுகள் தொலைவில் 1 லட்சத்து 50 ஆயிரம் நட்சத்திரங்கள் மத்தியில் உள்ளது. பூமியை விட 2.4 மடங்கு பெரியது. இங்கு 22 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவுகிறது. அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. அந்த கிரகத்தில் பெரும்பாலான பகுதிகள் எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை.
 
அவை பாறைகளாகவோ, கியாஸ் அல்லது திரவ நிலையிலோ இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த புதிய கெப்லர் 22-பி கிரகம் குறித்து சமீபத்தில் நடந்த வானவியல் விஞ்ஞானிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த கிரகம் பூமியை போன்றதுதான் என உறுதி செய்து அறிவிக்கப்பட்டது. அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என்றும் கருதப்படுகிறது.

Saturday, December 3, 2011

பனி காலப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள்

காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி மருத்துவர்கள் விளக்குகின்றனர்.
குளிர் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அதற்கு காரணம் அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான்.
இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும்.

பயர்பொக்ஸ் உலாவியை பின்னுக்கு தள்ளிய குரோம்

இணையத்தில் உலாவிகளுக்கான போட்டியில் பயர்பொக்ஸ் உலாவியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது குரோம்.
குரோமின் எளிமையான தோற்றத்தாலும் இணைய உபயோகம் வேகமாக இருப்பதாலும் பெரும்பாலானவர்கள் குரோம் உலாவியை தொடர்ந்து உபயோகித்து கொண்டு இருக்கின்றனர்.
குரோமின் வளர்ச்சியை கண்டு பல புதிய பதிப்புகளை பயர்பொக்ஸ் வெளிவிட்டாலும் கூகுள் குரோம் தொடர்ந்து கணிசமாக வளர்ந்து கொண்டு உள்ளது.
Internet Explorer உலாவி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. உலகளவில் 25.69% பேர் குரோமையும், பயர்பொக்சை 25.23% பயனர்களும், IE உலாவியை 40.63% பயனர்களும் உபயோகிக்கின்றனர். இதில் IE பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் சுமார் 18% குறைந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் மிகவும் பாரபட்சமாக நடத்தப்படும் ஏய்ட்ஸ் நோயாளிகள்

சுவிட்சர்லாந்த்தில் வேலைக்கு செல்லும் ஏய்ட்ஸ் நோயாளிகளில் 70% பேர் பணியிடங்களில் மிகவும் பாரபட்சமாக நடத்தப்படுவதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
1996ஆம் ஆண்டில் ஏய்ட்ஸ் நோயாளி என கண்டறியப்பட்ட மைக்கேல் பௌடோயிஸ் என்பவர், சுவிஸ் ஏய்ட்ஸ் ஃபெடரேஷன்(Swiss Aids Federation) என்ற கூட்ட அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வினை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக ஏய்ட்ஸ் நோயாளிகள் இந்த கூட்டமைப்பை அணுகி ஆலோசனை கேட்டுவருகின்றனர். இந்தக் கூட்டமைப்பின் தலைவரான பெட்டினா மேஸ்கிலி தெரிவிக்கையில் சக பணியாளரும், மேற்பார்வையாளரும் HIV தொற்றுக்குள்ளானவர்களை கேலி செய்கின்றனர்.
அவர்களின் நோய் குறித்து விமர்சிக்கின்றனர், பணியிடத்தில் நோய்த்தொற்றைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டி பணி நீக்கம் செய்யப்படுவதாக இவர் தெரிவித்துள்ளார்.
பௌடோயிஸ் என்பர் HIV இருப்பதாக அறிந்ததும் தான் சில மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்கப்போவதாகக் கருதினார். ஆனால் நவீன மருந்துகளின் உதவியால் அன்றாட வாழ்க்கையை நல்ல முறையில் நடத்திக்கொண்டு வேலைக்கும் சென்று கொண்டு இருக்கிறார்.
அதேப்போன்று ஜுரிச் நகரத்தில் உள்ள ஒரு பெரிய காப்பீட்டு நிறுவனத்தின் HIV தொற்று நோயால் தாக்கப்பட்ட கணக்கு மேலாளர் ஒருவர் பணியின் போது மற்றவரிடம் பழகுவதால் அங்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட வில்லை, இது போன்ற சில உதாரணங்களை ஏய்ட்ஸ் ஃபெடரேஷன் என்ற கூட்டமைப்பு முன் வைத்துள்ளது.