Wednesday, October 24, 2012

வௌவால்கள் ஒரு அதிசயம் ....................

  வௌவாள்களை கண்டு வியந்த மனிதன் !!!  பயந்தானா? வியந்தானா ?!!




          பாலூட்டிகளான வௌவாள்களை கண்டு வியந்த மனிதன் அதை பற்றி பல்வேறு கதைகள், திரைப்படங்கள், கார்டூன் திரைப்படங்கள் வரை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தோ கற்பனையாக வோ பல பரிமாணங்களை கொடுத்திருக்கிறார்கள். பேட் மேன், பேட் உமென் என பல கார்டூன்கள். டிராகுலா (ரத்தக்காட்டேரி) என்றவகையில் பல திரைப்படங்கள் இதைபற்றி எழுத இன்னும் பல பக்கங்கள் ஆகும்.

           உலகத்தில் வௌவாள்கள் 1240 வகைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இரு தொகுப்பாக பிரித்துள்ளார்கள் மைக்ரோ பேட்ஸ், மெகா பேட்ஸ்.   உணவு உண்ணும் பழக்கத்தை பொருத்து இருவகையாக பிரிக்கப்படுகிறது, 30 சதவீதம் பழந்திண்ணிகள் (வெஜிடேரியன்) 70 சதவீதம் பூச்சியுண்ணிகள்  (நான்வெஜிடேரியன்).  அவற்றில் சில இனங்கள் மீன்,தவளைகளை பிடித்து உண்பவை, சில ரத்தகாட்டேரிகள் ( வேம்பயர்ஸ்)  அல்லது இரத்தம் உறிஞ்சிகள் என வகை பிரிக்கப்பட்டுள்ளன.

          "கிட்டி" என அழைக்கப்படும் பன்றி மூக்கு வௌவாள்கள் அளவில் மிகச்சிறியது  றெக்கையின் நீளம் 15 சென்டிமீட்டர்கள். தங்க கீரிடம் சூட்டிய - பறக்கும் நரி என அடைமொழி கொண்ட மிகப்பெரும் வௌவாளின் றெக்கையின் நீளம் 4 அடி 11 இன்சுகள்.

            இந்த இனமானது இயோசீன் காலத்திலிருந்து அதாவது 52 மில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்ட இனங்களே வெற்றிகரமாகத் தொடரும் என்ற கருத்து கவனிக்கத் தக்கது.

             இதனுடைய இரத்த சம்பந்த உறவுக்காரர்கள் டால்பின், நீர்யானை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

             அரிய வகை பழந்திண்ணி வெளவாள்கள் சாதாரணமாக கோவை மாநகரின் மையப்பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் காணமுடிகிறது. மாலை நேரங்களில் சாதாரணமாக கூட்டமாக பறந்து திரிகிறது. குறிப்பாக நேரு ஸ்டேடியம் காந்தி பூங்காவில் இருக்கிறது. பழந்திண்ணி கொட்டை போடாத இடம் ஆர்டிக், அண்டார்டி பகுதி மட்டும் தான்.

            வௌவாள்கள் மீவொலிகளை (ULTRA SONIC) ஒலிக்கச்செய்து கிரகித்து பறக்கிறது. எந்த அளவு துள்ளியம் என்றால் எதிரில் ஒரு கொசுவோ அல்லது மயிரிழையோ இருப்பதாக கொண்டால் அதன் மீது இமைப்பொழுதில் மோதாமல் செல்லும்.

             அவை கண்பார்வை அற்றவை அல்ல ஆனால் சற்று மந்த பார்வை உடையவை. அதற்கு பதிலாக மீவொலிகளை எதிரொலிகளாக கிரகித்து இமேஜை தத்ரூபமாக அதன் மூளையினால் உணர முடியும்.  பறவைகளிடையே போட்டியினைத் தவிர்க்கவே அவை இரவில் உணவு தேடுகின்றன.  அதன் பயணம் சில சமயம் 800 கிலோ மீட்டர்களுக்கு தொடர்கிறது. சில வகை அல்ட்ரா வயலட் ஒளி சிதறல்களை உணரும் சக்தி படைத்தவை. கூட்டங்கள் வெவ்வேரானாலும் இவை சப்தங்களிலே உரையாடல் நிகழ்த்துகின்றன.

            இவை பூச்சி இனங்களை கட்டுப்படுந்தும் மாபெரும் காரணியாக திகழ்கிறது. உதாரணமாக ஆயிரம் வௌவாள்கள் கொண்ட ஒரு கூட்டமானது வருடத்தில் நான்கு டண் பூச்சிகளை சுவாகா செய்து விடுகிறது. 

            இருட்டு மற்றும் ஈரப்பதமுள்ள பகுதிகளில் வசிக்க விரும்புகிறது. இருந்தாலும் எல்லா வகைகளுக்கும் குகைப்பகுதிகள் தேவை இல்லை. பாழடைந்த  கட்டிங்கள்,  கோயில் மாடங்கள், பெரிய மரங்கள் இதன் வசிப்பிடங்கள்.

           பெரிய குகைகளில் வாழும் இவற்றின் கூட்டத்தின் மொத்த உறுப்பினர்கள் கிட்ட தட்ட ஒரு மில்லியன்.  இதன் பிறப்பு விகிதம் குறைவு தான்.  தாய் வௌவாள்கள் குட்டியை ஆறு அல்லது எட்டு வாரங்கள் நன்றாக பறந்து இறையைபிடிக்கும் வரை கூடவே இருந்து கவனித்துக் கொள்ளும்.

          மழைக்காலங்களில் இவை வெளியில் பறப்பதில்லை அந்த சமயங்களில் இதன் மீவொலி எதிரொலிப்பதில் இவைகள் கிரகிப்பதில் பிரச்சிணை உண்டு என்பதால். 

        பலவகை பெயர்கள் : -  படிக்கும் போது இறுதியில் வௌவாள் என கூட்டிப்படிக்கவும்.


             கத்திமுனை வால், தனிமுனை வால், புகை கக்கும், உரிஞ்சியுண்ணும், புனல்காது, அகண்டறெக்கை, பேய்முக, எலிமுக,நியூஜிலாந்து -குட்டைவால், புல்டாக்(மீன்பிடிப்பவை), இலைமூக்கு, பொய்முக ரத்தக்காட்டேரி, கண்குலி முக, லாட முக, நீர்யானைமுக,கிட்டி பன்றிமுக, அந்திமாலை, இருட்டுமுக, இன்னும்பல..(இத்தனை ஆங்கில படங்களுக்கு கதை கொடுத்த ஜீவன்கள்)

            டெக்சாஸ், ஓக்லகோமா,(மெக்சிகன் நீளவால் வௌவாள்), வர்ஜினியா (பெரியகாதுடைய வௌவாள்) போன்ற அமெரிக்க மாகாணங்கள் வௌவாள்களை சின்னமாக கொண்டுள்ளன.

செவ்வாய் கிரகம் பற்றிய சில தகவல்கள் :




செவ்வாய் இதர கிரகங்களுடன் ஒப்பிடும் போது இதில் குடியேறும் வாய்ப்பு அதிகம்.  பூமியை விட சிறியது.  தன்னைத்தானே சுற்ற 24.6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனுடைய ஒரு ஆண்டு என்பது  687 நாட்கள் அதாவது இது சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் நாட்கள்.  இதன் வெப்பநிலை -25 டிகிரி சென்டிகிரேட்.  மெலிதான காற்று மண்டலம் உண்டு. செவ்வாய் ரோமானியர்களின் போர் கடவுள்.

இதனுடைய துணைக்கோள்கள் , அதுதான் நிலவுகள் இரண்டு உண்டு. ஒன்றன் பெயர் தைமோஸ் [ரோமானிய பெயர் அர்த்தம் பயம்] மற்றது போபோஸ் [ரோமனில் அவசரம்]  இரண்டும் எதிர் எதிர் திசையில் சுற்றுபவை.

போபோஸ் நமது சூரிய குடும்பத்தை சேர்ந்தது அல்ல என்கிறார்கள் அதாவது வேறு கேலக்ஸியை சேர்ந்தது. செவ்வாயினால் ஈர்க்கப்பட்டு அதை சுற்றி வருவதாக நம்பப்படுகிறது.  செவ்வாயிற்கும் இதற்கும் இடைப்பட்ட தூரம் வெரும் 5800 கிலோமீட்டர்களே.  நம் நிலவுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 4 லட்சம் கிலோமீட்டர்கள்.

நம் நிலவிற்கும் இந்த நிலவிற்கும் [போபோஸ்] உள்ள வேற்றுமை நம்நிலவு சிறிது சிறிதாக பூமியை விட்டு விலகுகிறது;  இது சிறிது சிறிதாக செவ்வாயை நோக்கி செல்கிறது. அதாவது போபோஸ் 100 மிலியன் ஆண்டுகளில் அதனுடன் மோதி சிதறிவிடும்.

நம் நிலா 4 செ.மீ தூரம் விலகி செல்கிறது பல கோடி ஆண்டுகளில் பூமியை விட்டு விலகி சென்றுவிடும்.  [ இருந்துட்டு போகட்டுங்க 2012 முடியரதுக்குள்ளேயே உலகம் அழிஞ்சி போயிடுங்க ....என்று சிலர் சொல்லிக்கிறாங்க...நம்பாதீங்க.]

செவ்வாயில் ஸ்பிரிட் ரோவர் எனும் ரோபோ 2004 லேயே தரையிரங்கி உள்ளது. தண்ணீர் ஆய்வில் இறங்கியது. இது பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. விஞ்ஞானிகள், இது தரை இறங்கியதை "ஆறு நிமிட அற்புதம்" என்று சொன்னார்கள்.


செவ்வாயில் மனிதன் மற்றும் செவ்வாய் கிரகம் பற்றிய சில தகவல்கள்



ஆகஸ்ட் 6ல் செவ்வாயில் தரை இறங்கிய நாசாவின் செல்லகுட்டி "கியூரியாசிட்டி ரோவர்" ஏலியன்ஸ் குறித்தும் ஆராய தரையிரங்கியுள்ளது. இதற்கான செலவு கிட்டத்தட்ட 2.5 மிலியன் டாலர்கள்.  இதை உருவாக்கிய ஆய்வகம் MSL [Mars Science Laboratory ] என அழைக்கப்படுகிறது. இது இதற்கு முன் இவ்வளவு பெரிய சிரத்தை எடுத்து கொண்டிருக்காது. MSL விஞ்ஞானிகளால் துள்ளியமாக கணித்து செயல் படுத்தப்பட்ட "அந்த ஏழு டெரர் நிமிடங்கள்" மிகுந்த சுவாரஸ்யம் மிக்க தருனங்கள்.


க்யூரியாசிட்டியி வேதியல் லேப், எக்ஸ்ரே ஸ்கேனர், லேசர் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் மண்சத்து மூலக்கூறுகளை மற்றும் அக்காலம் இக்காலம் குறித்த ஆய்வு பணி செய்யப் போகிறது.

இந்த வெற்றி இன்று நேற்று செய்யப்பட்ட ஆய்வின் முயற்சி அல்ல கடந்த 50 ஆண்டுகாலப் போராட்டம்.

செவ்வாய் குறித்த ஆய்வில் ஈடுபட்ட நாடுகள் USSR, RUSSIA, NAZA, JAPAN, ESA, CHINA


1962 முதல் செவ்வாய் ஆய்வுகோள் ஸ்புட்னிக் 24 [USSR]
1971 மார்ஸ் 2 ஆர்பிட்டர்
1975 வைகிங் 1 மற்றும் 2
2003 மார்ஸ் எக்ஸ்பிரஸ் [ESA]
2003 மார்ஸ் ரோவர் ஸ்பிரிட்
2011 க்யூரியாசிடி ரோவர்

வல்லரசாக தம்மை இனம் காட்ட முயற்சிக்கும் நாடுகள் பலவும் செவ்வாய் ஆய்வில் இன்னும் பல திட்டங்களில் ஈடு படப்போகிறது.

[ESA] ஐரோபிய ஸ்பேஸ் ஏஜென்சி 2016 ல் ஒரு செவ்வாய் சுற்றுவட்ட கோளையும்  2018 தரை உளவியும் [ரோவர் ]அனுப்ப திட்டம் வைத்துள்ளது.

ரஷ்யன் பெடரல் ஸ்பேஸ் ஏஜென்சி ESA உடன் இணைந்து 2018 ல் கியூரியாசிட்டிபோல " EXOMARS " எனும் ஒரு ரோவரை இறக்க திட்டமிட்டுள்ளது.  இது செவ்வாய் தரையினுள் துளையிட்டு  படிமங்களை சேகரிக்கும் இதைகொண்டு 3 பில்லியன் வருடங்களுக்கு முந்தய கதையை தோண்டப் போகிறார்கள்.


இந்தியன் ஸ்பேஸ் ஏஜென்சியிடமும் ஒரு திட்டம் உண்டு 2013ல் செவ்வாய்ச்சுற்றி [ஆர்பிட்டரை] அனுப்பும் திட்டம் தான் அது.

சீனா ரஷ்யா இதேபோல் திட்டங்களை வைத்துள்ளது. 

ரஷ்யா இதுவரை " MARSJINX "  16 ஸ்பேஸ் கிராப்டுகளை செவ்வாய் திட்டத்திற்காக தொலைத்திருக்கிறது. 

"போபோஸ் கிராண்ட் மிசன் " எனும் திட்டம் ரஷ்யாவால் சென்ற ஆண்டு நவம்பரில் அனுப்ப திட்டமிடப்பட்டு ராக்கெட் கோலாரினால் தோல்வி அடைந்தது.

சைனாவின் யிங்ஹோ-1 [ Yinghuo-1] ரஷ்யாவின் ஸ்பேஸ்கிராப்டின் மூலமாக அனுப்பட்ட திட்டமும் தோல்வியடைந்தது. சைனாவின் அடுத்த கட்ட நடவடிக்கை 2016 ல்.

நாசாவின் மனிதர்களை செவ்வாயை சுற்றி வரும் திட்டமும் உண்டு. இதற்கென MAVEN  எனும் ஆர்பிட்டர் 2013 ல் அனுப்பபோகிறது. அதற்கு முன் LEMUR எனும் ஆய்வுக்கோள் அனுப்பி சூழ்நிலை தகவமைப்பை ஆராயும். அதே போல "போபோஸ்" செவ்வாய் நிலவையும் ஆய்வு செய்யப்போகிறார்கள்.

SMALER என்பது தேர்ந்தெடுத்த செவ்வாய் சைட்டுகளில் இருந்து சாம்பில் எடுத்து வரும் முயற்சி.

செவ்வாய்க்கு மனிதனை அனுப்பு திட்டம் அதிக செலவு பிடிக்கும் திட்டம். தற்போதைய டெக்னாலஜியில் முன்னேற்றம் கண்டு இது 2023 இல் நிறைவேற்றப்படும்.

இதற்கிடையில் கலிபோர்னியாவில் ஒரு தனியார் அமைப்பும்    வருங்காலத்தில் அதாவது 15 அல்லது 20 வருடங்களுக்குள்ளாக மனிதனை அங்கே இறக்கும் திட்டம் [" SPACEX " ] வைத்திருக்கிறது இதை உறுதியாக செயற்படுத்தப்போகிறோம்  என்கிறார் நிறுவனர் எலோன் முஸ்க்.