RSS

Wednesday, October 24, 2012

வௌவால்கள் ஒரு அதிசயம் ....................

  வௌவாள்களை கண்டு வியந்த மனிதன் !!!  பயந்தானா? வியந்தானா ?!!




          பாலூட்டிகளான வௌவாள்களை கண்டு வியந்த மனிதன் அதை பற்றி பல்வேறு கதைகள், திரைப்படங்கள், கார்டூன் திரைப்படங்கள் வரை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தோ கற்பனையாக வோ பல பரிமாணங்களை கொடுத்திருக்கிறார்கள். பேட் மேன், பேட் உமென் என பல கார்டூன்கள். டிராகுலா (ரத்தக்காட்டேரி) என்றவகையில் பல திரைப்படங்கள் இதைபற்றி எழுத இன்னும் பல பக்கங்கள் ஆகும்.

           உலகத்தில் வௌவாள்கள் 1240 வகைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இரு தொகுப்பாக பிரித்துள்ளார்கள் மைக்ரோ பேட்ஸ், மெகா பேட்ஸ்.   உணவு உண்ணும் பழக்கத்தை பொருத்து இருவகையாக பிரிக்கப்படுகிறது, 30 சதவீதம் பழந்திண்ணிகள் (வெஜிடேரியன்) 70 சதவீதம் பூச்சியுண்ணிகள்  (நான்வெஜிடேரியன்).  அவற்றில் சில இனங்கள் மீன்,தவளைகளை பிடித்து உண்பவை, சில ரத்தகாட்டேரிகள் ( வேம்பயர்ஸ்)  அல்லது இரத்தம் உறிஞ்சிகள் என வகை பிரிக்கப்பட்டுள்ளன.

          "கிட்டி" என அழைக்கப்படும் பன்றி மூக்கு வௌவாள்கள் அளவில் மிகச்சிறியது  றெக்கையின் நீளம் 15 சென்டிமீட்டர்கள். தங்க கீரிடம் சூட்டிய - பறக்கும் நரி என அடைமொழி கொண்ட மிகப்பெரும் வௌவாளின் றெக்கையின் நீளம் 4 அடி 11 இன்சுகள்.

            இந்த இனமானது இயோசீன் காலத்திலிருந்து அதாவது 52 மில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கால மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்ட இனங்களே வெற்றிகரமாகத் தொடரும் என்ற கருத்து கவனிக்கத் தக்கது.

             இதனுடைய இரத்த சம்பந்த உறவுக்காரர்கள் டால்பின், நீர்யானை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

             அரிய வகை பழந்திண்ணி வெளவாள்கள் சாதாரணமாக கோவை மாநகரின் மையப்பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் காணமுடிகிறது. மாலை நேரங்களில் சாதாரணமாக கூட்டமாக பறந்து திரிகிறது. குறிப்பாக நேரு ஸ்டேடியம் காந்தி பூங்காவில் இருக்கிறது. பழந்திண்ணி கொட்டை போடாத இடம் ஆர்டிக், அண்டார்டி பகுதி மட்டும் தான்.

            வௌவாள்கள் மீவொலிகளை (ULTRA SONIC) ஒலிக்கச்செய்து கிரகித்து பறக்கிறது. எந்த அளவு துள்ளியம் என்றால் எதிரில் ஒரு கொசுவோ அல்லது மயிரிழையோ இருப்பதாக கொண்டால் அதன் மீது இமைப்பொழுதில் மோதாமல் செல்லும்.

             அவை கண்பார்வை அற்றவை அல்ல ஆனால் சற்று மந்த பார்வை உடையவை. அதற்கு பதிலாக மீவொலிகளை எதிரொலிகளாக கிரகித்து இமேஜை தத்ரூபமாக அதன் மூளையினால் உணர முடியும்.  பறவைகளிடையே போட்டியினைத் தவிர்க்கவே அவை இரவில் உணவு தேடுகின்றன.  அதன் பயணம் சில சமயம் 800 கிலோ மீட்டர்களுக்கு தொடர்கிறது. சில வகை அல்ட்ரா வயலட் ஒளி சிதறல்களை உணரும் சக்தி படைத்தவை. கூட்டங்கள் வெவ்வேரானாலும் இவை சப்தங்களிலே உரையாடல் நிகழ்த்துகின்றன.

            இவை பூச்சி இனங்களை கட்டுப்படுந்தும் மாபெரும் காரணியாக திகழ்கிறது. உதாரணமாக ஆயிரம் வௌவாள்கள் கொண்ட ஒரு கூட்டமானது வருடத்தில் நான்கு டண் பூச்சிகளை சுவாகா செய்து விடுகிறது. 

            இருட்டு மற்றும் ஈரப்பதமுள்ள பகுதிகளில் வசிக்க விரும்புகிறது. இருந்தாலும் எல்லா வகைகளுக்கும் குகைப்பகுதிகள் தேவை இல்லை. பாழடைந்த  கட்டிங்கள்,  கோயில் மாடங்கள், பெரிய மரங்கள் இதன் வசிப்பிடங்கள்.

           பெரிய குகைகளில் வாழும் இவற்றின் கூட்டத்தின் மொத்த உறுப்பினர்கள் கிட்ட தட்ட ஒரு மில்லியன்.  இதன் பிறப்பு விகிதம் குறைவு தான்.  தாய் வௌவாள்கள் குட்டியை ஆறு அல்லது எட்டு வாரங்கள் நன்றாக பறந்து இறையைபிடிக்கும் வரை கூடவே இருந்து கவனித்துக் கொள்ளும்.

          மழைக்காலங்களில் இவை வெளியில் பறப்பதில்லை அந்த சமயங்களில் இதன் மீவொலி எதிரொலிப்பதில் இவைகள் கிரகிப்பதில் பிரச்சிணை உண்டு என்பதால். 

        பலவகை பெயர்கள் : -  படிக்கும் போது இறுதியில் வௌவாள் என கூட்டிப்படிக்கவும்.


             கத்திமுனை வால், தனிமுனை வால், புகை கக்கும், உரிஞ்சியுண்ணும், புனல்காது, அகண்டறெக்கை, பேய்முக, எலிமுக,நியூஜிலாந்து -குட்டைவால், புல்டாக்(மீன்பிடிப்பவை), இலைமூக்கு, பொய்முக ரத்தக்காட்டேரி, கண்குலி முக, லாட முக, நீர்யானைமுக,கிட்டி பன்றிமுக, அந்திமாலை, இருட்டுமுக, இன்னும்பல..(இத்தனை ஆங்கில படங்களுக்கு கதை கொடுத்த ஜீவன்கள்)

            டெக்சாஸ், ஓக்லகோமா,(மெக்சிகன் நீளவால் வௌவாள்), வர்ஜினியா (பெரியகாதுடைய வௌவாள்) போன்ற அமெரிக்க மாகாணங்கள் வௌவாள்களை சின்னமாக கொண்டுள்ளன.

செவ்வாய் கிரகம் பற்றிய சில தகவல்கள் :




செவ்வாய் இதர கிரகங்களுடன் ஒப்பிடும் போது இதில் குடியேறும் வாய்ப்பு அதிகம்.  பூமியை விட சிறியது.  தன்னைத்தானே சுற்ற 24.6 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனுடைய ஒரு ஆண்டு என்பது  687 நாட்கள் அதாவது இது சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் நாட்கள்.  இதன் வெப்பநிலை -25 டிகிரி சென்டிகிரேட்.  மெலிதான காற்று மண்டலம் உண்டு. செவ்வாய் ரோமானியர்களின் போர் கடவுள்.

இதனுடைய துணைக்கோள்கள் , அதுதான் நிலவுகள் இரண்டு உண்டு. ஒன்றன் பெயர் தைமோஸ் [ரோமானிய பெயர் அர்த்தம் பயம்] மற்றது போபோஸ் [ரோமனில் அவசரம்]  இரண்டும் எதிர் எதிர் திசையில் சுற்றுபவை.

போபோஸ் நமது சூரிய குடும்பத்தை சேர்ந்தது அல்ல என்கிறார்கள் அதாவது வேறு கேலக்ஸியை சேர்ந்தது. செவ்வாயினால் ஈர்க்கப்பட்டு அதை சுற்றி வருவதாக நம்பப்படுகிறது.  செவ்வாயிற்கும் இதற்கும் இடைப்பட்ட தூரம் வெரும் 5800 கிலோமீட்டர்களே.  நம் நிலவுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 4 லட்சம் கிலோமீட்டர்கள்.

நம் நிலவிற்கும் இந்த நிலவிற்கும் [போபோஸ்] உள்ள வேற்றுமை நம்நிலவு சிறிது சிறிதாக பூமியை விட்டு விலகுகிறது;  இது சிறிது சிறிதாக செவ்வாயை நோக்கி செல்கிறது. அதாவது போபோஸ் 100 மிலியன் ஆண்டுகளில் அதனுடன் மோதி சிதறிவிடும்.

நம் நிலா 4 செ.மீ தூரம் விலகி செல்கிறது பல கோடி ஆண்டுகளில் பூமியை விட்டு விலகி சென்றுவிடும்.  [ இருந்துட்டு போகட்டுங்க 2012 முடியரதுக்குள்ளேயே உலகம் அழிஞ்சி போயிடுங்க ....என்று சிலர் சொல்லிக்கிறாங்க...நம்பாதீங்க.]

செவ்வாயில் ஸ்பிரிட் ரோவர் எனும் ரோபோ 2004 லேயே தரையிரங்கி உள்ளது. தண்ணீர் ஆய்வில் இறங்கியது. இது பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. விஞ்ஞானிகள், இது தரை இறங்கியதை "ஆறு நிமிட அற்புதம்" என்று சொன்னார்கள்.


செவ்வாயில் மனிதன் மற்றும் செவ்வாய் கிரகம் பற்றிய சில தகவல்கள்



ஆகஸ்ட் 6ல் செவ்வாயில் தரை இறங்கிய நாசாவின் செல்லகுட்டி "கியூரியாசிட்டி ரோவர்" ஏலியன்ஸ் குறித்தும் ஆராய தரையிரங்கியுள்ளது. இதற்கான செலவு கிட்டத்தட்ட 2.5 மிலியன் டாலர்கள்.  இதை உருவாக்கிய ஆய்வகம் MSL [Mars Science Laboratory ] என அழைக்கப்படுகிறது. இது இதற்கு முன் இவ்வளவு பெரிய சிரத்தை எடுத்து கொண்டிருக்காது. MSL விஞ்ஞானிகளால் துள்ளியமாக கணித்து செயல் படுத்தப்பட்ட "அந்த ஏழு டெரர் நிமிடங்கள்" மிகுந்த சுவாரஸ்யம் மிக்க தருனங்கள்.


க்யூரியாசிட்டியி வேதியல் லேப், எக்ஸ்ரே ஸ்கேனர், லேசர் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் மண்சத்து மூலக்கூறுகளை மற்றும் அக்காலம் இக்காலம் குறித்த ஆய்வு பணி செய்யப் போகிறது.

இந்த வெற்றி இன்று நேற்று செய்யப்பட்ட ஆய்வின் முயற்சி அல்ல கடந்த 50 ஆண்டுகாலப் போராட்டம்.

செவ்வாய் குறித்த ஆய்வில் ஈடுபட்ட நாடுகள் USSR, RUSSIA, NAZA, JAPAN, ESA, CHINA


1962 முதல் செவ்வாய் ஆய்வுகோள் ஸ்புட்னிக் 24 [USSR]
1971 மார்ஸ் 2 ஆர்பிட்டர்
1975 வைகிங் 1 மற்றும் 2
2003 மார்ஸ் எக்ஸ்பிரஸ் [ESA]
2003 மார்ஸ் ரோவர் ஸ்பிரிட்
2011 க்யூரியாசிடி ரோவர்

வல்லரசாக தம்மை இனம் காட்ட முயற்சிக்கும் நாடுகள் பலவும் செவ்வாய் ஆய்வில் இன்னும் பல திட்டங்களில் ஈடு படப்போகிறது.

[ESA] ஐரோபிய ஸ்பேஸ் ஏஜென்சி 2016 ல் ஒரு செவ்வாய் சுற்றுவட்ட கோளையும்  2018 தரை உளவியும் [ரோவர் ]அனுப்ப திட்டம் வைத்துள்ளது.

ரஷ்யன் பெடரல் ஸ்பேஸ் ஏஜென்சி ESA உடன் இணைந்து 2018 ல் கியூரியாசிட்டிபோல " EXOMARS " எனும் ஒரு ரோவரை இறக்க திட்டமிட்டுள்ளது.  இது செவ்வாய் தரையினுள் துளையிட்டு  படிமங்களை சேகரிக்கும் இதைகொண்டு 3 பில்லியன் வருடங்களுக்கு முந்தய கதையை தோண்டப் போகிறார்கள்.


இந்தியன் ஸ்பேஸ் ஏஜென்சியிடமும் ஒரு திட்டம் உண்டு 2013ல் செவ்வாய்ச்சுற்றி [ஆர்பிட்டரை] அனுப்பும் திட்டம் தான் அது.

சீனா ரஷ்யா இதேபோல் திட்டங்களை வைத்துள்ளது. 

ரஷ்யா இதுவரை " MARSJINX "  16 ஸ்பேஸ் கிராப்டுகளை செவ்வாய் திட்டத்திற்காக தொலைத்திருக்கிறது. 

"போபோஸ் கிராண்ட் மிசன் " எனும் திட்டம் ரஷ்யாவால் சென்ற ஆண்டு நவம்பரில் அனுப்ப திட்டமிடப்பட்டு ராக்கெட் கோலாரினால் தோல்வி அடைந்தது.

சைனாவின் யிங்ஹோ-1 [ Yinghuo-1] ரஷ்யாவின் ஸ்பேஸ்கிராப்டின் மூலமாக அனுப்பட்ட திட்டமும் தோல்வியடைந்தது. சைனாவின் அடுத்த கட்ட நடவடிக்கை 2016 ல்.

நாசாவின் மனிதர்களை செவ்வாயை சுற்றி வரும் திட்டமும் உண்டு. இதற்கென MAVEN  எனும் ஆர்பிட்டர் 2013 ல் அனுப்பபோகிறது. அதற்கு முன் LEMUR எனும் ஆய்வுக்கோள் அனுப்பி சூழ்நிலை தகவமைப்பை ஆராயும். அதே போல "போபோஸ்" செவ்வாய் நிலவையும் ஆய்வு செய்யப்போகிறார்கள்.

SMALER என்பது தேர்ந்தெடுத்த செவ்வாய் சைட்டுகளில் இருந்து சாம்பில் எடுத்து வரும் முயற்சி.

செவ்வாய்க்கு மனிதனை அனுப்பு திட்டம் அதிக செலவு பிடிக்கும் திட்டம். தற்போதைய டெக்னாலஜியில் முன்னேற்றம் கண்டு இது 2023 இல் நிறைவேற்றப்படும்.

இதற்கிடையில் கலிபோர்னியாவில் ஒரு தனியார் அமைப்பும்    வருங்காலத்தில் அதாவது 15 அல்லது 20 வருடங்களுக்குள்ளாக மனிதனை அங்கே இறக்கும் திட்டம் [" SPACEX " ] வைத்திருக்கிறது இதை உறுதியாக செயற்படுத்தப்போகிறோம்  என்கிறார் நிறுவனர் எலோன் முஸ்க்.

Friday, March 30, 2012

டெனிஸ் மிர்சா ஒரு பார்வை ........................


விளையாட்டு துறை பத்திரிகையாளரான இம்ரான் மிர்சாவிற்கும் தாயாகிய நசிமாவிற்கும் மும்பையில் சானியா மிர்சா பிறந்தார். அவர் ஹைதராபாதில் ஒரு ஷியா முஸ்லிம் குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்.மிர்சா தனது ஆறாம் வயதில் டென்னிஸ் விளையாடத் தொடங்கி 2003ம் ஆண்டு டென்னிஸ் விளையாட்டை தொழிலாக்கிக் கொண்டார்.
அவர் தனது தந்தையாலும் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும் டென்னிஸ் விளையாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டார். அவர் முதலில் ஹைதராபாதில் உள்ள நாசிர் பள்ளியில் படித்து பின்னர் செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார்.2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிர்சா இந்திய பிடேறேஷன் கோப்பை குழுவில் சேர்ந்து அனைத்து மூன்று ஒற்றையர்கள் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றார். 2003ம் ஆண்டில் நடந்த விம்பிள்டன் மகளிர் இரட்டையர் விளையாட்டில் ரஷ்யாவை சேர்ந்த அலிசா க்லேய்போனவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி பட்டம் பெற்றார்.
மகளிர் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனைகளில் மிர்சா இந்தியாவிலிருந்து ஒற்றையர் விளையாட்டில் 27ம் தர வரிசையிலும் இரட்டையர் விளையாட்டில் 18வது தர வரிசையிலும் அடைந்து,மிக அதிகப் படியான தர வரிசையில் இடம் பெற்றவராவார். அவர் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் விளையாட்டுப் போட்டித் தொடரில் இந்தியாவில் முதல் பெண்மணியாக வித்திட்ட நற்பெயரை கொண்டுள்ளார்.

Tuesday, March 27, 2012

.மஹேல ஜயவர்தன முப்பதாவது சதம்

இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 30 ஆவது சதத்தை எடுத்துள்ளார்.
இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிராக காலி மைதானத்தில் திங்கட்கிழமை(26.3.12) தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டத்தின் போதே ஜயவர்தன இந்தச் சாதனையை படைத்தார்.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இலங்கை அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ஓட்டங்களை எடுத்துள்ளது. மஹேல ஜயவர்தன 168 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்.
தனது 129 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் மஹேல ஜயவர்தன அதில் 10,000 க்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ளார். 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்திய அணிக்கு எதிராக கொழும்பிலுள்ள ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை அவர் தொடங்கினார்.
2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பிலுள்ள எஸ்எஸ்ஸி விளையாட்டு மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியில் அவர் 374 ஓட்டங்களை எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களும் அதுவே.
இங்கிலாந்து அணிக்கு எதிராகவே ஆவர் அதிகபட்ச சதங்களை எடுத்துள்ளார்.
இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ள 30 சதங்களில் 7 இங்கிலாந்து அணிக்கு எதிராக அடிக்கப்பட்டவை. அடுத்து இந்தியாவுக்கு எதிராக 6 சதங்களும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 சதங்களும் அவர் அடித்துள்ளார்.
ஒரு நாள் போட்டி ஒன்றில் மஹேள ஜெயவர்தன
வங்கதேசத்துடன் நான்கு சதங்களும், நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று சதங்களும் அடித்துள்ள மஹேல ஜயவர்தன, ஆஸ்திரேலிய அணியுடன் ஆடும்போது இரண்டு சதங்களும், மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஒரு சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சராசரியாக டெஸ்ட் போட்டிகளில் அவர் 51 ஓட்டங்களை பெற்றுள்ளார். இலங்கை அணிக்கு இதற்கு முன்னரும் அவர் தலைமையேற்றிருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் சார்பில் அதிகபட்ச சதங்களை அடித்துள்ளவரும் மஹேல ஜயவர்தன தான்.
இது தவிர 373 ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடி பத்தாயிரத்துக்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ளார்

Sunday, March 18, 2012

தனது வளர்ச்சியை நிறுத்திய உலகின் உயரமான மனிதர்

துருக்கி நாட்டைச் சேர்ந்த சுல்தான் கோசென்(Sultam Kosan) கடந்த 2011ம் ஆண்டில் உலகின் உயரமான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். எட்டு அடி 3 அங்குலம் உயரமாக இருந்த கோசென் Acromegaly என்ற வளர்ச்சி நோயின் காரணமாக பிறந்தது முதல் இன்று வரை வளர்ந்து கொண்டே இருந்துள்ளார். இவரின் இந்த வளர்ச்சிக்கு பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்பட்டுள்ள கட்டிதான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து சுவீடன் நாட்டில் தயாரான ஒரு மருத்துவக்கருவியை அறுவைச் சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் கோசெனின் கபாலத்திற்குள் செலுத்தி பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள கட்டியை அகற்றியுள்ளனர்.
எனவே இவர் இனி வளர வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகங்கள் இந்த மருத்துவ சிகிச்சை பற்றிய விபரங்களை பொது மக்களுக்கு வெளியிட்டுள்ளது.கோசென் தற்போது வளரவில்லை என்பதை வெர்ஜினியா பல்கலைக்கழக அதிகாரிகளும் உறுதி செய்துள்ளதால் இந்த சிகிச்சை குறித்த விவரங்களும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இது குறித்து வெர்ஜினியா பல்கலைக்கழகத்தின் மூளை அறுவை சிகிச்சை நிபுணரான ஜேசன் ஷீஹான்(Jason Sheehan) கூறுகையில், இந்தச் சிகிச்சை நல்ல பலன் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Thursday, March 1, 2012

SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பதற்கு


மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி: 
முதலில் உங்களின் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Mobile என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு வரும் விண்டோவில் Add a Phone என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து ஒரு விண்டோ ஓபன் ஆகும்.
முதலில் நீங்கள் வசிக்கும் நாட்டினை தேர்வு செய்து கொண்டு அடுத்து கீழே உள்ளதி உங்கள் மொபைலின் Service Provider தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஒருவேளை உங்களுடைய Service Provider அந்த பட்டியலில் இல்லை என்றால் Other Carrier என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
Next பட்டனை அழுத்தவும். இன்னொரு விண்டோ திறக்கும்.
இப்பொழுது உங்கள் மொபைல் போனில் F என டைப் செய்து அங்கு கொடுத்திருக்கும் எண்ணுக்கு SMS அனுப்புங்கள். (ஒவ்வொரு நாட்டிற்கும் மொபைல் எண் வேறுபடும்)
நீங்கள் SMS அனுப்பிய உடனே உங்களுக்கு ஒரு பதில் SMS வரும் அதில் உள்ள Confirmation code குறித்து கொண்டு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் கொடுக்கும் மற்றும் உங்களுடைய மொபைல் எண் மற்றவர்களுக்கு தெரிய கூடாது என்றால் Share my mobile number with my friends என்பதில் உள்ள டிக் மார்க் நீக்கி விட்டு Next பட்டனை அழுத்தவும்.
அவ்வளவு தான் உங்களின் மொபைல் எண் பேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டு விடும். மற்றும் அதில் உள்ள settings உங்களுக்கு தேவையான படி மாற்றி வைத்து கொள்ளுங்கள்.
இனி நீங்கள் பதிவு செய்யப்பட மொபைல் SMS வழியே பேஸ்புக்கை உபயோகிக்கலாம்.
SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கும் முறை: 
மொபைல் SMS மூலம் உபயோகிக்க கீழே உள்ள முறைகளை பயன்படுத்தவும். பேஸ்புக் சுவரில் எழுத சாதரணமாக SMS டைப் பண்ணி முன்பு குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பினால் போதும் சுவரில் அப்டேட் ஆகிவிடும்.
புதிய நண்பரை சேர்க்க – add your friend name.
Subcribe செய்ய – Subscribe your friend name.
வளர்ந்து விட்ட தொழில் நுட்பத்தில் எல்லாமே சுலபமாகி விட்டது. பிரபல சமூக தளமான பேஸ்புக் தளத்தில் பல எண்ணற்ற வசதிகள் கொடுத்துள்ளனர்.
அதில் ஒரு முக்கியமான வசதியாக கணணி இல்லாமல் இணைய இணைப்பு இல்லாமல் மொபைல் SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிக்கலாம்.
இதற்கு முதலில் உங்கள் மொபைல் எண்ணை பேஸ்புக்கில் பதிவு செய்ய வேண்டும்.